Wednesday, July 01, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
ஆன்மீகம்

அதிகப்படியான மனஅழுத்தத்தைப் போக்க உதவும் ஜோதிட வழிமுறைகள்...

அதிகப்படியான மனஅழுத்தத்தைப் போக்க உதவும் ஜோதிட வழிமுறைகள்...

மனஅழுத்தம் என்பது இன்றைய காலத்தில் மிகப்பெரிய பிரச்சனையாக மாறி வருகிறது. ஒவ்வொருவரும் ஒருவரையொருவர் முந்தி செல்வதற்கு அதிக அவசரத்திலும் போட்டியிலும் ஒருவித மன அழுத்தத்திலேயே வாழ்கின்றனர். சிலருக்கு நல்ல வேலை கிடைக்காத மன அழுத்தம், சிலருக்கு தொழில் சரியாக நடக்காத மன அழுத்தம், சிலர் குடும்பத் தகராறுகளால் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள், இன்னும் சிலர் வெளி வாழ்க்கையில் ஏதோவொன்றைப் பற்றி யோசித்து அழுத்தத்திலேயே இருப்பார்கள். சிறு வயதுக் குழந்தைகள் கூட இப்போது மன அழுத்தப் பிரச்னையை எதிர்கொள்கிறார்கள்.

மன அழுத்தத்திற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் சில சமயங்களில் கிரகங்களின் தவறான நிலை காரணமாக கூட, மன அழுத்தம் மற்றும் மன பிரச்சனைகள் ஏற்படலாம். இத்தகைய சூழ்நிலையில், ஜோதிடத்தில் சில பரிகாரங்கள் கூறப்படுகின்றன. அதைச் செய்வதன் மூலம் ஒருவர் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம் என்றும் நம்பப்படுகிறது. எனவே மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் சில ஜோதிடப் பரிகாரங்களைப் பற்றி இப்போது இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம்…

வெள்ளி ஆபரணங்கள்

ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒருவருக்கு மன அழுத்தம் இருந்தால், வெள்ளி நகைகளை அணிவது அவர்களுக்கு நன்மை பயக்கும். வெள்ளியானது சந்திர பகவானின் உலோகமாகக் கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி, சந்திரன் மனதிற்கான காரணியாகும். வெள்ளிப் பொருட்களை அணிந்தால் சந்திர பகவானின் அருளைப் பெற்றி மனம் குளிர்ச்சியடையும் என்பது ஐதீகம். இதன் மூலம் படிப்படியாக பதற்றம் நீங்கி அமைதி அடையும். எனவே, நீங்கள் அதிகப்படியான மனஅழுத்தத்திற்கு ஆளாகியிருந்தால் வெள்ளி ஆபரணங்களை அணியலாம்.

சிவ பெருமான் வழிபாடு

எவர் ஒருவரது ஜாதகத்தில் சந்திரன் பலவீனமான நிலையில் இருக்கிறாரோ, அந்த நபர் மன உளைச்சல் மற்றும் மனரீதியான பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். இதற்கு சிவபெருமானை தவறாமல் வழிபட வேண்டும். சிவபெருமானை வழிபடுவதால் சந்திரன் அனுகூலமாகி மன அழுத்தம் நீங்கும். எனவே, மனஅழுத்தத்தில் இருந்து விடுபட சிவ பெருமானை தொடர்ந்து வழிபட்டு வாருங்கள். விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

ருத்ராட்சம்

ஜோதிட சாஸ்திரப்படி, யாருக்காவது மன அழுத்தம் இருந்தால், திங்கட்கிழமையன்று, வெள்ளியிலான இரண்டு முகம் கொண்ட ருத்ராட்சத்தை அணிய வேண்டும். ருத்ராட்சம் அணிவதால் மனதை அமைதிப்படுத்துவது மட்டுமின்றி பல நன்மைகளும் உள்ளன. எனவே, மனஅழுத்தம் நீங்க ருத்ராட்சம் அணிவது சிறந்த வழியாகும்.

வெள்ளியில் தண்ணீர் பருகவும்

மன அழுத்தத்தை குறைக்க சந்திர பகவானை குளிர்விப்பது மிகவும் முக்கியம். அத்தகைய சூழ்நிலையில், ஒவ்வொரு நாளும் ஒரு வெள்ளி டம்ளரில் தண்ணீர் குடிக்கத் தொடங்குங்கள். சந்திர பகவானுக்கு நீர் மற்றும் வெள்ளி இரண்டிலும் சக்தி இருப்பதாக நம்பப்படுகிறது. எனவே, வெள்ளி டம்ளரில் தினந்தோறும் தண்ணீர் குடிப்பது சந்திரனைப் பலப்படுத்துவதோடு, அவர்களை மன அழுத்தத்திலிருந்தும் பாதுகாத்திடும்.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,100
தங்கம் (24k)
1 கிராம்
₹13,755
வெள்ளி
1 கிராம்
₹245

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

அடுத்து வாசிக்க

பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி? வாசிக்க →